மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கல்வி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் கன்யாகுமரி மாவட்டம் சென்றுள்ளார். இதனைதொடர்ந்து, கன்னியாகுமரி ரயில்வே சந்திப்பு, தெற்கு தாமரை குளம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் , அப்பகுதி மக்களை சந்திக்க உள்ளார்.
மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்களை சந்திக்க உள்ளார். முன்னதாக, கன்னியாகுமரியில் பேசிய அவர், மக்களின் மன நிலையை புரிந்து கொள்ளும் கல்வி யாத்திரையாக வந்துள்ளதாக தெரிவித்தார்.