கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட்சி அமைக்க வரும்படி ஆளநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.
இதை ஏற்று புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு முன்பாக பெங்களூருவில் உள்ள கோவிலில் எடியூரப்பா சாமி தரிசனம் செய்தார்.
பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, ஆளுநர் மாளிகை முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக மாநிலத்தின், 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார்.
Hope he continues to be CM for 5 years.
தோல௠வி உரà¯à®¤à®¿