ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி வெற்றி

தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இன்று மலேசியாவுடன் மோதிய இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

தொடக்க லீக் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. நவ்னீத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். சீன அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

போட்டியை நடத்தும் தென் கொரியா முதல் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்ற நிலையில், ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து வரும் 19ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா, கொரியா அணியை எதிர்கொள்ள உள்ளது.