கால்பந்து தரவரிசையில் 97-வது இடத்தில் இந்தியா

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியா 97-வது இடத்தை பிடிதுள்ள்ளது. இதுமட்டுமின்றி ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தரவரிசையில் 15-வது இடத்தை பிடித்துள்ளது.

வரும் 2019ம் ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் போட்டியை நடத்தும் அமீரகம், பஹ்ரைன் மற்றும் தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று அணிகளும் தங்களது தரவரிசையை மேம்படுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா இந்த குழுவில் இரண்டாவது பெரிய தரவரிசை பெற்ற அணியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மும்பையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் இன்டர்காண்டினேன்டல் கோப்பை போட்டியில் இந்தியா அணி பங்கேற்க உள்ளது இதிலும் தரவரிசையில் இடம் பெறாத கென்யா, சீன தைபே மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் இடம் பெற்றுள்ளன.