களிமண் தரையில் நடத்தப்படும் ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரானது இன்று தொடங்குகிறது.
பட்டம் வென்றால் இரண்டாயிரம் சர்வதேச தரப்புள்ளிகள் தரும் ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். களிமண் நாயகனான ரஃபேல் நடால் 10முறை இந்த தொடரில் பட்டம் வென்று அசைக்க முடியாத நாயகனாக வலம் வருகிறார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் நடால், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். நடாலை தாண்டி மற்ற முன்னணி வீரர், வீராங்கனைகளும் தரவரிசைக்காக இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.