கர்நாடகாவில் நாளை மறுநாள், குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதையடுத்து கர்நாடக சட்டசபையில் ஏற்பாடுகள் தீவிரம்; 1 லட்சம் மக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
கர்நாடக முதல்வராக குமாரசாமி நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். ஆனால் இரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சு நடைபெற்று வருகிறது.
அதுபோல் 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் தங்களுக்கு நிறைய இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறது. துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவிகளையும் காங்கிரஸே வைத்துக் கொள்ள பார்க்கிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே சி வேணுகோபால் கூறுகையில், புதன்கிழமை அன்று குமாரசாமி மட்டும பதவிப்பிரமாணம் செய்து கொள்வார். அடுத்த நாள் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொள்வர் என்றார்.