தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பேரணியாக செல்ல மக்கள் முடிவெடுத்தனர்.
இதை போலீஸார் தடுத்தனர். எனினும் பேரணியாக சென்றதால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 5 நாட்களாக அங்கு அமலில் இருந்த 144 தடை உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து காயமடைந்தவர்களை நேற்றைய தினம் மருத்துவமனைக்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட உள்ளார்.