பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், ரஷ்யாவில் ஜூன் 14ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் தான் ‘ஸாபிவாகா’. ரஷ்யாவில் இருக்கும் ஒரு வகை ஓநாய் தான் உலக கோப்பை தொடருக்கான மஸ்காட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2016ல் நடந்த ஆன்லைன் வாக்குப்பதிவில் கடும் போட்டி இருந்த நிலையில், ஸாபிவாகா ஓநாய் அதிகபட்சமாக 53 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது.
புலி (27%), பூனை (20%) அடுத்த இடங்களைப் பிடித்தன. இந்த சின்னத்தை வடிவமைத்தவர் எகடரினா போச்சரோவா என்ற கிராபிக் டிசைன் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ஸாபிவாகா என்றால் ரஷ்ய மொழியில் சிறப்பாக செயல்படுபவர் என்று அர்த்தம்.