பேரவை நிகழ்ச்சிகளை மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் இன்று கூடுகிறது.
துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை கடந்த 29-ம் தேதி கூடியது. முன்னதாக, 24-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடியது. இதில், பேரவையை 23 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நேற்று வரை 6 அலுவல் நாட்கள் முடிந்துள்ளன.
சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் தவிர, ஜூன் 15-ம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் 18 முதல் 22 வரை 5 நாட்கள் பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஜூன் 15 முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது.
இதை மாற்றியமைக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் மீண்டும் நடக்கிறது. ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட ஜூன் 18 முதல் 22 வரையிலான 5 நாட்களில் பேரவைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும், கூட்டத் தொடரை ஜூன் 30-க்குள் முடிப்பது தொடர்பாகவும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.