தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், “இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும். நூலகங்களை பராமரிக்க தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டத்தோடு, அதற்கான நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகிறது” என்று கூறினார். மேலும், பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனை பெற்று கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari