விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.
இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா வரவழைத்துள்ளது. இதனை கருப்பு இனத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்துக்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.