உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கஉள்ள நிலையில் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி இன்று நாளை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.
இந்நிலையில், 2026ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று மாஸ்கோவில் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் ஒரு நாடுகள் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.