சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ஆஸ்திரேலியா உடனான நல்லுறவு பாதிக்காத வகையில் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா, சிங்கப்பூர் அருங்காட்சியகங்களில் உள்ள சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பீனிக்ஸ் பறவை வடிவில் சென்னை மெரினாவில் அமைய உள்ள ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 2ம் தேதி இந்த பணிகள் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.