02 June14 high court - 2026தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கக்கோரி, கவர்னரிடம் மனு அளித்த, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த 2017 செப்டம்பர் மாதம் 18ம் தேதி சபாநாயகர் உத்தர விட்டார். இதை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தீர்ப்பினை வழங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending