ஜூன் 12ம் தேதி வரை காவிரி ஆணைய உறுப்பினரை நியமிக்காத கர்நாடகாவை, மத்திய அரசு கண்டு கொள்ளாதது கொடுமை என பாமக கட்சி தலைவர்ராமதாஸ் கூறியுள்ளார்.
கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் முதல்வர் பதவியில் நீடிப்பதற்கான உத்தரவாதத்தை மட்டும் முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார் என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.