ராமேஸ்வரம் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்குகிறது

மூன்று நாட்கள் நடைபெறும் பிரதிஷ்டை திருவிழாவின் முதல் நாள் இன்று மாலை 6 மணிக்கு 10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி திட்டக்குடி பகுதியில் நடைபெறும்.

இரண்டாம் நாள் விழா நாளை கோதண்டராமர் கோயிலில் இலங்கை மன்னரான ராவணனின் தம்பி விபிஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

மூன்றாவது நாள் 22-ம் தேதி காசிவிசுவநாதர் சன்னதியில் இருந்து மூத்த குருக்கள் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தை சுமந்தபடி கோயில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்வார்.