லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி விலை உயர்வு

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை 15-20% வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக லாரிகள் 3வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பின்னரும், இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்துவருகின்றானர். தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் நேற்று முன் தினம் முதல் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.