தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழக பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசி வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படும்,எனவே தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.