டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

திருச்சி திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

தொண்டமான்பட்டியில் உள்ள மதுக்கடையை திறப்பதற்கு இன்று, ஊழியர்கள் வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்தனர். விசாரணையில், 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 770 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.