பேராசிரியை நிர்மலா தேவியை குரல் மாதிரி பரிசோதனை செய்ய இன்று முதல் மூன்று நாள்கள் சென்னை அழைத்துச்செல்ல சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைப் பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாகத் தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.