விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி வைப்பு நிதியில் எம்ஜிஆர் கலை சமூக அறிவியல் இருக்கை ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் கோயிலில் ரூ.30.71 கோடி செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும். கிராம பகுதிகளில் நிதிவசதி இல்லாத கோவில் திருப்பணி மேற்கொள்ள, ஒரு கோயிலுக்கு ரூ. 1லட்சம் வீதம், 1000 கோயில்களுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் 17.30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மானியமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இறகு பந்து அகாடமி 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்