சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சியட் டயர் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதாகவும் நஷ்டத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் – டீசல் , மதுபானங்கள் தவிர இதர இனங்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன. எனவே மாநில வருவாயை பெருக்க அந்த இரண்டு இனங்களில் மட்டுமே வரியை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானகளுக்கான கலால் வரியை 12% உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எலைட் மதுபானக் கூடங்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரியை உயர்த்தப்படுவதால் மதுபானங்களின் விலை வெகுவாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே தற்போது 58% வசூலிக்கப்படும் கலால் வரியானது 70% உயர உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது பானங்களின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.2000 வரை உயரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.