தமிழக காவல்துறை சார்பில் இன்று ‘மாபெரும் ரத்ததான முகாம்’

தமிழக காவல்துறை சார்பில் இன்று  மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரில் 50 சதவீதம் (60 ஆயிரம்) பேர் ரத்ததானம் செய்தால்கூட 60 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்படும். ஆனால், ஒரே நேரத்தில் சேகரிக்கப்படும் 60 ஆயிரம் யூனிட் ரத்தத்தை சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும் முடியாத நிலை உள்ளது. இதனால், தானமாக பெறப்படும் ரத்தம் வீணாவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.