சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 20,000 போலீசார் ரத்ததானம் செய்ய உள்ளார் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சுமார் 2 ஆயிரம் போலீசார் இரத்த தானம் செய்ய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், நமது மாநிலத்தில் ஆண்டிற்கு 8,00,000 யூனிட்ஸ் இரத்தம் தேவையுள்ளது, இதில் சுமார் 50 சதவீதம் இரத்தம் 89 அரசு இரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது மீதமுள்ள 50 சதவீதம் இரத்தம் தனியார் இரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது. எனவே, ஜூன் மாதத்தில் காவல்துறையால் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் இரத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.