ஆசிய போட்டிக்கான துப்பாக்கிசுடுதல் அணியில் ககன் நரங், ஜூட்டு ராய் ஆகியோர் இடம் பெறவில்லை

இந்தோனேசியாவில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ககன் நரங், ஜூட்டு ராய் மற்றும் இளம் வீரர் மேஹுளி க்ஹோஷ் ஆகியோர் இடம் பெறவில்லை.

சீனியர் ரைபிள் பிரிவில், சஞ்சீவ் ராஜ்புத்ம் அகில் ஷாரன், ஏர் ரைபிள் பிரிவில் ரவிகுமார், தீபக் குமார், 300 மீட்டர் ஸ்டாண்டர்ட் ரைபிள் பிரிவில் ஹர்ஜின்தர் சிங், அமித் குமார், ஏர் ரைபிள் கலப்பு பிரிவில், ரவி குமார், அபுர்வி சந்டேலா ஆகியோரும்

பெண்கள் பிரிவில், அஞ்சும்மௌடிகில், காயத்திரி என், சுரப் சௌதரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்