இன்று காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் இன்று பகல் 1.55 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையேயான மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-சென்னை பயணிகள் ரயில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.