எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு நேற்று வந்தார்.
திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக தனது மனைவி துர்காவுடன் வந்த மு.க. ஸ்டாலின், தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் திமுக கவுன்சிலர் மேத்தாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சில நாள்களுக்கு முன் திருமணமான மேத்தாவின் மகள் அனுசுயா மேத்தா – கார்த்தி தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக சென்றார். அங்கு தஞ்சாவூர் மாவட்ட திமுக சார்பில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.