தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார்: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், மாநில அரசு மக்கள் மீது எந்த திட்டத்தையும் திணிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், மாநில அரசு ஒத்துழைப்பை அளிக்கிறது என்றார்.