முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று ஆஜராகிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா உறவினர்கள், அவரது உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடம் அவரது வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகனான ஜெய் ஆனந்த், அப்பல்லோ மருத்துவமனையின் எக்கோ டெக்னீசியன் நளினி ஆகியோரை இன்றும், அப்பல்லோ மருத்துவர் ரமா, செவிலியர் விஜயலட்சுமி ஆகியோரை நாளையும் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.