நாசரேத்தில் இன்று 18-வது அபிஷேகப் பெருவிழா

நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஊழியத்தின் 18-வது அபிஷேகப் பெருவிழா இன்று தொடங்கி 8 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

கூட்டத்துக்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப் பேராயர் அறிவர் எஸ்.இ.சி. தேவசகாயம் தலைமை வகிக்கிறார். பேராலய திருப்பணிவிடையாளர்கள் ஜெ. இஸ்ரவேல் ஞானராஜ், எஸ். எட்வின்ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காமா ஊழிய பாடகர் குழுத் தலைவர் பி. குட்டிஜேஸ்கர் தலைமையிலான  குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர். வேடசந்தூர் இயேசுவே பரலோகத்தின்வழி ஊழியங்கள் நிறுவனர்  வி. டேனியல் தனசிங் தேவசெய்தி வழங்கி சிறப்புப் பிரார்த்தனை செய்கிறார்.