18mlas1 - 2026 18mlas - 2026

 

 

 

 

 

 

 

 

 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ்.திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அறிவித்தார்.

ஜூன்14ல் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு 3வது நீதிபதி அமர்விற்கு மாற்றியமைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அப்போதைய பொறுப்பு கவர்னர் சி.வித்யாசாகர் ராவை சந்தித்த டிடிவி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அதிமுகவின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

மேலும் இவர்களது செயல்தானாக முன்வந்து அதிமுகவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்கு சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியன்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 19 எம்எல்ஏக்களில் எஸ்டிகே. ஜக்கையன், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி கவர்னரை சந்திக்க அழைத்து சென்றுவிட்டதாக தெரிவித்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தார். இதையடுத்து மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த செப்டம்பர் 18ம் தேதி அறிவித்தார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending