முதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் இன்று மோதல்

ரஷியாவில் நடைபெற்று வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் இன்று மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.

உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.

இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள்.