இன்று தலைமை செயலகம் முற்றுகை ஊரக வளர்ச்சித்துறை சங்கம் திட்டம்

இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம், உள்ளாட்சி தேர்தலை நடத்த கோருதல்உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கடந்த ஜூலை 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆறு நாட்களாக கிராமங்களில் சுகாதாரம், அடிப்படை பணிகள் முடங்கியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது: 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஊராட்சி செயலருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான சம்பளம் வழங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டு, சட்டசபையில் முதல்வர் கவனிப்பார் என பேசி ஒதுங்கிகொண்டார்.

இதுபோல் பல வகைகளில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், 22 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.385 ஒன்றிய அலுவலகங்கள், 10 ஆயிரத்து 860 ஊராட்சி அலுவலங்கள் பூட்டப்பட்டுள்ளன.கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்ததை முற்றுகையிடவும், முதல்வர், அமைச்சரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்,என்றார்.