நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுககுள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 24-க்குள் 3 கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக ஆசைவார்த்தைக் கூறி பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.