இன்று முதல் சென்னை கடற்கரை – வேளச்சேரி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியையொட்டி, சனிக்கிழமை முதல் இன்று சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இன்றும, வரும் ஜூலை 21, 28, ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.15-க்கு மின்சார ரயில் புறப்படும். வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15), ஜூலை 22, 29 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.55-க்கு மின்சார ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.