காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.
“தைரியமாக இருங்கள்… தலைவர் நலமாக இருக்கிறார்”: தொண்டர்களுக்கு கனிமொழி ஆறுதல்
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து கடந்த 2 நாட்களாக முரணான தகவல்கள் வெளியாகி வருவதால் காவேரி மருத்துவமனையை நோக்கி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தொண்டர்களை லேசான தடியடி நடத்தி போலீசார் கட்டுப்படுத்தி அப்பகுதியை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேட்டி அளித்த ஆ.ராசா “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. நலமாக இருக்கிறார். கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.