இந்தோனேசியா ஆசிய போட்டி- நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்

ஆசிய போட்டி வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் ஜகர்த்தா, பாலெம்பங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்கிறார்.

20 வயதான நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என்று இந்திய ஒலிம்பிச் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.