நான் தவறு செய்திருந்தால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் : ராகுல் காந்தி மோடிக்கு சவால்

 

நான் தவறு செய்துள்ளேன் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மேடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98 ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி  நான் தவறு செய்துள்ளேன் என்று உங்களால் நிரூபிக்க முடியும் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மேடிக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் அவர் பேசிய கூறியுள்ளதாவது :-

முன்பு எனது பாட்டி மீது சேற்றை வாரி இறைத்தனர்.பிறகு எனது தந்தை மீதும், எனது தாய் மீதும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினர். இப்போது என் மீது வீண் பழி சுமத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.  என்மீது தேவையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை உங்கள் கட்சியினர் சுமத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டி வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பால் சர்வதேச அளவில் நமது நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில தினங்னங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாக குற்றம் சாற்றினார். மேலும், அது தொடர்பாக பிரதமர் விசாரணை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிபடத்தக்கது.

 

அனைத்து விசாரணை அமைப்புகளும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எனவே எனக்கெதிராக விசாரணை நடத்தி, நான் தவறு செய்துள்ளேன் என்று நிரூபிக்க முடிந்தால் என்னைச் சிறையில் தள்ளுங்கள். என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்

.