90 சதவீத விபத்துகள் கவன குறைவால் ஏற்படுகிறது – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வாகன ஓட்டுநர்களின் கவன குறைவால் 90 சதவீத சாலை விபத்துகள் நடைபெறுவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அப்போலா மருத்துவமனை சார்பில் விபத்துகளை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுகாதரா துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் பெரும்பலான சாலை விபத்துகள் தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.