பச்சோந்தி… கொள்கையற்றவர்… அரசியல் வியாபாரி…: செந்தில் பாலாஜிக்கு எடப்பாடியார் சூட்டிய பட்டங்கள்!

சற்றுமுன் சென்னை
edappadi palanisamy1 - 2026

செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, கொள்கைப் பிடிப்பு இல்லாத ஓர் அரசியல் வியாபாரி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜிக்கு பட்டம் சூட்டியுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு வேற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அழகான பட்டங்களைச் சூட்டினார். அவருடைய சாடல் வார்த்தைகள்…

அமமுக. உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்திருப்பது, அதிமுக என்ற குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுவதாக உள்ளது. தொண்டர்களின் இயக்கமான அதிமுகவிற்கு வந்தவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு!. 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் விசுவாசத்துடன் இருந்ததால்தான் எங்களுக்கு உரிய விலாசம் கிடைத்தது என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி!

மேலும், செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, கொள்கைப் பிடிப்பு இல்லாத ஓர் அரசியல் வியாபாரி என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.