விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதான எதிர்ப்பைக் காட்ட கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கல்லூரியைக் குற்றம் சொல்ல நிறையவே முகாந்திரம் இருந்தாலும் பிரச்னைகளை எதிர்த்துப் போராட முடியாத ஒரு சமுதாயத்தை மெல்ல உருவாக்கி வருகிறோம் என்பதுதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது.
 
சில கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கி படிக்கும் போது ஏதேனும் தேவையியில்லாத ஒரு பிரச்னையை காரணமாக கூறி அந்த கல்லூரி நிர்வாகியால் மாணவர்களை விரட்டிய விடுதியை விட்டு வெளியேற்றிய பல சில சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் தொடர்ந்து நடந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளது.
 
கல்லூரியில் இருந்து மாணவரை தற்காலிக நீக்கம் செய்து பெற்றோரை அழைத்து வரும்படி சொல்லி கடிதமும் அனுப்பியும் உள்ளனர். அந்த நிலையில் ஒரு சில மாணவர்கள் நிலத்தை விற்று, அல்லது பல இடங்களில் கடன் வாங்கி கட்டணம் கட்டிப் படிக்க வைத்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் தயங்கித் தயங்கி விரட்டிய விஷயத்தை கூறியும்
உள்ளனர்.
 
அதை கேட்ட ஒரு சில பெற்றோர்கள் “அடப் போனா மயிராச்சு.. கையுங்காலும் இருக்குதுல்ல, பைண்டிங் செய்வது, காஜா எடுப்பது, பட்டன் வைப்பது, மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவது, டைப் ரைட்டிங் என்று பொழச்சுக்கலாம் போடா… என்றும் கூறி அவரது பிள்ளைகளை ஊக்கப் படுத்தி அவர்களை அனுப்பி தயார் படுத்தி பலரை உருவாக்கியும் இருந்தனர்.
 
சில பெற்றோர்கள் ஊக்கப் படுத்தின் அடிப்படையில் அவரது பிள்ளைகள் கல்லூரிப் பிரச்னையை எதிர்கொள்வதில் எந்த வித தயக்கமும் கட்டியது இல்லை. அவர்களும் பல்வேறான வேலைகளை பார்த்து இந்த சமூகத்தில் உயந்த நிலையை பலரும் அடைந்து தான் உள்ளனர்.
 
பொதுவாக பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் சாதி, மதம், மொழி, காதல், மதிப்பெண், கல்லூரி நிர்வாகம், வேலை, கடன் என்று தொடர்ந்து போராட்டங்களை சந்தித்தவாறுதான் இருக்கப்போகிறார்கள். அதற்கு அவர்களைத் தயார்படுத்தி அனுப்புவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
 
போச்சு.. படிக்கலைன்னா வாழ்க்கையே போச்சு, என்று அவர்களின் காதுமடல்களில் அமர்ந்து ஓதிக் கொண்டே இருக்கும் பெற்றோருக்கும் இந்தப் பிள்ளைகளின் மரணத்தில் பங்குண்டு.
 
பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் அவர்களால் சுயமாக வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தெரிந்தவர்கள் கடைகளிலோ நிறுவனங்களிலோ வேலைக்கு அனுப்பலாம். அது ஒரு சாதாரண வேலையாக இருப்பது அவசியம். இதுவும் படிப்புதான்.
 
பெற்றோர்கள் அவரது பிள்ளைகளை ஊக்கப் படுத்தி போராடுவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் . அப்படி ஏதாவது சிக்கலில் மாட்டி பிள்ளைகள் பெற்றோரிடம் வந்தால் “போனா மயிராச்சு, கையும் காலும் நல்லா இருக்குதுல்ல..” என்று சொல்லும் துணிச்சலை முதலில் பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய தேவை. .
 
ஷான் –
செய்தியாளர்,(வாசகர்)
தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளம்
 
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending