பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்தில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 83 ரன்களும், மொஹமத் ஹபீஸ் 76 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களில் மில்லன் 3 விக்கெட்டையும்,  போல்ட்(Boult), ஹென்றி இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், சன்ட்னர் (Santner) இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைபற்றினர். 291 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலனது அணி  35.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக போட்டி தடை பட்டது. பின்னர் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. 45 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடர்ந்தது. 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அணி வெற்றி பெற்றது இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி கைபற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடரையும் கைபற்றியுள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending