இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே  அடிலெய்டில்  நடந்த 3-வது T-20 போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஸ்  செய்துள்ளது. மேலும் T-20 தரவரிசையில் முதலிடத்தை தக்க  வைத்து கொண்டுள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் எடுத்தது. ஷேன் வாட்சன் 71 பந்துகளில் 124 ரன்கள் அடித்தார். 198 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் வாட்சனும், தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் கோலியும் வென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending