இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவிகக்யில்,

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 109 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்தை காட்டிலும், திறப்பு அதிகளவில் உள்ளதால் நேற்று முன்தினம் 69.60 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 69.49 அடியாக சரிந்தது.

இந்நிலையில், கும்பகோணம் மகாமகத்திற்காக, இன்று மேட்டூர் அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இன்று காலை 6 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படும் எனவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பதாலும் கும்பகோணம் மகாமக விழாவையொட்டியும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending