திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது எனக் கூறி, திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ. போஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, வழக்கை காரணம் காட்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மார்ச் 18 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காத தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இன்றுக்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
இதனால் இன்று மாலைக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.