ஆத்விக்… இதுதான் குட்டி ‘தல’யோட பெயர்

ajith family (2)இன்னும் சில நாட்களில் 43 வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் அஜித்திற்கு கடந்த மார்ச் 2ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே 8 வயதில் அனோஷ்கா என்ற மகள் இருக்கிறார். அஜித்தின் ஆண் வாரிசுக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற ஆவல் அனைத்து ரசிகர்களிடமும் அதிகமாகவே இருந்தது.

தற்போது அஜித் மகனின் பெயர் தெரிய வந்துள்ளது. ஆத்விக் அஜித்குமார் என்பதுதான் ‘குட்டி தல’யின் பெயர். ஆத்விக் என்றால் ‘தனித்துவம்’ என அர்த்தமாம்.