காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரம், தனது புவித் தளத்திலிருந்து சுமார் 10 அடி நகர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூகம்பம் குறித்து ஆய்வு செய்து வரும் லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நில ஆய்வியல் மைய நிபுணர்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். காத்மாண்டு பகுதியில் ஒலி அலைகளை ஆய்வு செய்த போது, தரைத்தளத்தில் தற்போதுள்ள நிலையிலிருந்து காத்மாண்டு தென்பகுதியில் சுமார் 10 அடி நகர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் பூமி தள அடுக்குகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending