அண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் மே 2 ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டான்செட் நுழைவுத்தேர்வு இயக்குனர் மல்லிகா, டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்ததாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலை கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இதுவரை 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூன் 11 ம் தேதி எம்.பி.ஏ, எம்.சி.ஏ மாணவர்களுக்கும், ஜூன் 12 ல் எம்.இ, எம்.டெக் மாணவர்களுக்கும் 80 மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். விண்ணப்பங்களை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.