இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை
போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிறம் கொண்ட உடையை அணிந்து பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே வரும் 30ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிறம் கொண்ட உடையை அணிந்து பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
தொலைகாட்சியில் கிரிக்கெட் போட்டியை காண்பவர்கள் போட்டியில் பங்கேற்கும் அணிகள் இரண்டும் ஒரே மாதிரியான சீருடை அணித்து விளையாடுவதை தவிர்க்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியின் சீருடையில் மாற்ற இருக்காது. அவர்களை எதிர்த்து விளையாட உள்ள இந்தியா அணி புதிய சீருடையில் பங்கேற்பார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.