குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், தரமற்ற, அதிக விலைக்கு தண்ணீரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது என்று தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புக்கு 10 டேங்கர் லாரிகளை முன்பதிவு செய்யலாமா? கேள்வி எழுப்பிய அவர், ஏழை மக்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதே அரசின் முதல் கடமை என்று தெரிவித்தார்.
அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் என்று கூறிய அவர், ஆந்திர மாநிலம் வழங்க வேண்டிய 12 டிஎம்சி நீரில், 2 டிஎம்சி மட்டுமே வழங்கியது என்றும் தெரிவித்துள்ளார்.